Published : 24,Apr 2020 07:22 AM

7 மாத இளம் கர்ப்பிணி உயிரிழப்பு - காதல் கணவரே அடித்துக் கொன்றதாக புகார்..!

7-month-pregnant-girl-death-in-vaniyambadi

வாணியம்பாடியில் காதல் திருமணம் செய்த 7 மாத கர்ப்பிணி பெண்ணை அடித்து கொலை செய்துவிட்டதாக கணவர் மீது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் அஜித்(23). ஒடுகத்தூர் அடுத்த மேல் அரசம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பூங்கொடி. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் குடும்பத்தினரிடம் பேசி கடந்த 7 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து கணவன் - மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக பிரச்னை இருந்து வந்துள்ளது.

image

மதுரையில் மோப்பநாய் பிரிவு தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை  

இதேபோல் தொடர்ந்து பிரச்னை வர அஜித் பூங்கொடியை தாக்கியதாக தெரிகிறது. இதனால் பூங்கொடி கோபித்துக்கொண்டு அவரது உறவினரான ஜீவா நகர் பகுதியை சேர்ந்த சுமதி வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கும் சென்று வீட்டுக்கு வரும்படி அஜித் அவரை தாக்கி அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று தனி அறையில் உடல் முழுவதும் காயங்களுடன் தூக்கில் தொங்கியவாறு உயிரிழந்த நிலையில் பூங்கொடி கிடந்துள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

image

சாலையில் தானே கெடுபிடி: கடல் வழியாக 1000கிமீ பயணம் செய்த தொழிலாளர்கள்!

மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து 7 மாத கர்ப்பிணியான அக்காள் மகள் பூங்கொடி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் அதனால் அஜீத் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுமதி என்பவர் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்