[X] Close

கொரோனாவுக்கு பிறகு இந்தியாவை புனரமைத்தல் - கமலின் ஆலோசனைகளும், கோரிக்கைகளும்!

தமிழ்நாடு

Re-imagining-India-for-post-Covid-World-says-kamalhaasan

கொரோனாவுக்கு பிறகு இந்தியாவை புனரமைத்தல் என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சில திட்டங்களையும், ஆலோசனைகளையும் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா, இந்தியாவையும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கொரோனாவுக்கு பிறகு இந்தியாவை புனரமைத்தல் எப்படி என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சில ஆலோசனைகளையும், கோரிக்கைகளையும் அவர் முன்வைத்துள்ளார்.

image


Advertisement

அதில், சுகாதாரத்துறையே புதிய பாதுகாப்புத்துறை, உழவுக்கு வந்தனை செய்வோம். இப்போதாவது, அமைப்பு சாரா தொழிலாளர்களை முறைப்படுத்துங்கள், வருமான சமத்துவமின்மையை சீர்செய்தல் மற்றும் வறுமை ஒழிப்பு என்ற தலைப்புகளில் பல திட்டங்களையும், கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளார்.

மேலும் குறிப்பிட்டுள்ள அவர், வல்லரசு என்ற இந்தியாவின் பல்லாண்டுக் கனவை, தூசி தட்டி எடுத்து, அதை நோக்கி பயணிக்கும் நேரம் இது. உலக நாடுகள் அனைத்துக்கும் முன் மாதிரியாக, நம்பிக்கையின் முன்னோடியாக சிலருக்கு புரியும்படி சொல்வதென்றால் சரியான காரணங்களுக்காக விஷ்வ-குருவாக மாறுவோம் என தெரிவித்துள்ளார்.

"ஐபிஎல் போட்டிகள் இலங்கையில் நடத்துவது ஆபத்து" முத்தையா முரளிதரன் !

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close