குஜராத் முதல்வர் விஜய் ரூபானியை சந்தித்த எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார்.
குஜராத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் ரூபானி தலைமையில் நேற்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காந்தி நகரில் உள்ள முதல்வரின் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநில துணை முதல்வர் நிதின் பட்டேல், மாநில உள்துறை அமைச்சர் பிரதீப்சின் ஜடேஜா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலரும் கலந்துக்கொண்டனர்.
இந்நிலையில், உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்ற ஹாடியா-ஜமால்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. இம்ரான் கிடவாலாவுக்கு நேற்று மாலை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்ற மற்றவர்களுக்கும் கொரோனா பரவியிருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். எம்எல்ஏ இம்ரானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும், முதல்வர் விஜய் ரூபானிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை தனிமைப்படுத்திக்கொண்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்