Published : 14,Jun 2017 05:50 AM

விசாரணைக்கு அழைத்து சென்றவர் மரணம்: தற்கொலையா..? விபத்தா..?

Question-arises-about-accused-death

திருட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மணிகண்டன் என்பவர் சென்னை ‌ஆர்.கே.நகர் காவல் நிலையம் எதிரே வேனில் அடிபட்டு உயிரிழந்தார். அவர் ‌வேனின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். வயது 16. இரு சக்கர வாகனங்களை திருடி போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்துள்ளார். மீஞ்சூர் காவல் நிலையத்தில் இவர் மீது பல திருட்டு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் அருகே திருமுருகன் என்பவருக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தை திருடி சென்ற போது, பொது மக்கள் மணிகண்டனை பிடித்து ஆர்.கே. நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

வழக்கை விசாரித்த போலீசார், ஆய்வாளர் மாலையில் வரும் போது கையெழுத்திட வரும் படி கூறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காவல் நிலையத்தின் வெளியே வந்த மணிகண்டன், காவல் நிலையத்தின் எதிரேவே வேனில் அடிபட்டு உயிரிழந்தார். இதனிடையே, மணிகண்டன் ‌வேனின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்