கொரோனா வைரஸில் இருந்து மீண்டிருக்கும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், எல்லாம் முடிந்துவிட்டது என்ற நிலையில், தனது உயிரை காப்பாற்றியது செவிலியர்கள் தான் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார். போரிஸ் ஜான்சன் பாராட்டிய அந்த செவிலியர்கள் யார் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது, அந்நாட்டவரை மட்டுமின்றி, உலக நாடுகளின் தலைவர்களையும் மிகுந்த வருத்ததில் ஆழ்த்தியிருந்தது. இன்று அவர் நோயில் இருந்து மீண்டு, வீடு திரும்பி இருப்பதற்கு பிரிட்டனின் செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் பணியாற்றிய இரு செவிலியர்கள் தான் முக்கிய காரணம்.
நோயில் இருந்து மீண்டதும் காணொலி வெளியிட்டிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இதை ஒப்புக் கொண்டிருக்கிறார். எல்லாம் முடிந்துவிட்டது என நினைத்திருந்த வேளையில், கண்ணும் கருத்துமாக கவனித்து தன்னை உயிர் பிழைக்க வைத்தது செவிலியர்கள் மெக் கீயும், பிதர்மாவும் தான் என நெகிழ்ச்சி பொங்க கூறியிருக்கிறார் போரிஸ்.
அதே நேரம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கில் சீராக கடமையாற்றியதாக செவிலியர் மெக் கீயின் பெற்றோர் புளகாங்கிதம் அடைகின்றனர். நியூசிலாந்தின் இன்வெர்கார்கில் நகரை சேர்ந்த மெக் கீ, இரவு, பகல் பாராமல் மருத்துவ சேவையாற்றி போரிஸ் ஜான்சனின் உயிரை காப்பாற்றி இருப்பது தங்கள் நாட்டிற்கு பெருமை சேர்க்கிறது என தெரிவித்திருக்கிறார், அந்நகரின் மேயரான டிம் ஷாட்போல்ட்.
தமது வாழ்நாளில் போரிஸ் ஜான்சனுக்காக பணிவிடை செய்ததை மறக்க முடியாது என்றும், அவரது உயிரை காப்பாற்றியது பெருமிதமாக இருக்கிறது என்றும் மிகுந்த அடக்கத்துடன் தெரிவிக்கிறார் மெக் கீ.
இதே போல், போரிஸ் ஜான்சனின் உயிரை காப்பாற்றிய மற்றொரு செவிலியரான பிதர்மாவை, அவர் பிறந்த போர்ச்சுகல் நாட்டின் அதிபர் மார்செலோ ரெப்பெல்லோ டி சோசா பாராட்டியுள்ளார். கொரோனாவுக்கு எதிரான போரில், தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் செவிலியர்கள் பணியாற்றுவது அவர்களது கடமை உணர்வை மெச்சுவதாக இருக்கிறது.
Loading More post
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
மகாராஷ்டிராவில் அதிரடி - பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் உத்தரவு
பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறை கூடாது - முகமது ஜுபைர் விவகாரத்தில் ஐ.நா. கருத்து
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix