Published : 11,Apr 2020 01:40 PM
தமிழகத்திற்கு வரவேண்டிய ரேபிட் கிட் அமெரிக்காவுக்கு திருப்பிவிடப்பட்டன: தலைமைச் செயலர்

தமிழகத்திற்கு வரவேண்டிய ரேபிட் கிட் அமெரிக்காவுக்கு திருப்பிவிடப்பட்டதாக தலைமைச் செயலர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருப்பினும், கொரோனாவை அறிவதற்கான சோதனைகள் விரைவாக செய்யப்பட்டவில்லை என்று நிபுணர்கள் பலரும் கூறி வந்தனர். இந்நிலையில், நேற்று முன் தினம் செய்தியாளர்களிம் பேசிய முதல்வர் பழனிசாமி, “கொரோனா தடுப்புக்கான மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் கையிருப்பில் உள்ளன. 3,371 வெண்டிலேட்டர்கள் தயாராக உள்ளன. 2500 வெண்டிலேட்டர் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்டுக்கு ஆர்டர் தரப்பட்டுள்ளது. இன்றிரவு 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் வரும்” எனத் தெரிவித்தார்.
தமிழகத்திற்கு வர வேண்டிய ரேபிட் கிட் கருவிகள் அமெரிக்காவுக்கு
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) April 11, 2020
திருப்பிவிடப்பட்டுள்ளன
- தலைமைச் செயலாளர் #CoronaVirus | #COVID2019india | #Lockdown | #StayHome | #StayAtHomepic.twitter.com/DeiBgekcN4
ஆனால், இரண்டு தினங்கள் ஆகியும் உபகரணங்கள் வரவில்லை. இன்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமைச் செயலர் சண்முக ரேபிட் கிட் குறித்த தகவல்களை கூறினார் அப்போது, “தமிழகத்திற்கு வரவேண்டிய ரேபிட் கிட் அமெரிக்காவுக்கு திருப்பிவிடப்பட்டன. அதனால், அடுத்ததாக தமிழகத்திற்கு உபகரணங்கள் வந்துவிடும்” என்றார்.
முன்னதாக தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969 ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.