Published : 11,Jun 2017 02:10 PM

புதுக்கோட்டை மருத்துவமனைக்கு முதல் பேஷண்ட் ஈ.பி.எஸ்.தான்: ஸ்டாலின்

EPS-was-the-first-patient-in-Pudukkottai-Government-hospital-says--M-K-Stalin

புதுக்கோட்டை அரசு மருத்துவமனை திறப்புவிழாவில், ரிப்பனை வெட்டும்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர் கையை அவரே வெட்டிக்கொண்டார். எனவே, புதிய மருத்துவமனைக்கு முதல் நோயாளியே அவர்தான் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவமனை திறப்புவிழாவில் கலந்துகொள்ள வந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், “அதிமுக ஆட்சியின் அரசியல் அநாகரீகத்தை எடுத்துச் சொல்வதற்காக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கைது செய்வதால் திமுக அழிந்துவிடாது. இன்னும் கைது செய்யுங்கள். கைது செய்ய கைது செய்யத்தான் இன்னும் எழுச்சியோடு இந்த இயக்கம் நடைபோடும். எங்கள் எம்.எல்.ஏ.க்களை கைது செய்ததால் அவர்களின் கவுரவம் குறைந்துவிட்டதாக நான் கருதவில்லை. இதன் மூலம் அவர்களை தேர்ந்தெடுத்து சட்டமன்றத்துக்கு அனுப்பிய மக்களை கொச்சைப்படுத்தி, அவமானப்படுத்தியிருக்கிறது. திறக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியவர்கள் நோயாளிகள் அல்ல. இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்கள்தான். அரசு மருத்துவமனை திறப்புவிழாவில், ரிப்பனை வெட்டும்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர் கையை அவரே வெட்டிக்கொண்டார். எனவே, புதிய மருத்துவமனைக்கு முதல் நோயாளியே அவர்தான். திமுக எம்.எல்.ஏ.க்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் ஒப்பந்ததாரர் சுப்ரமணியத்தைப் பற்றிப் பேசுவார் என்ற பயம். அதனால்தான் அவர்களைக் கைது செய்து தடுத்திருக்கிறார்கள்” என்று அவர் பேசினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்