கொரோனா பாதிப்பால் வெளிமாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து வேலை செய்த பணியாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிப்பதாக தெரிகிறது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் முன்னரே இந்தியா முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. தற்போது ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அதுவரை ரயில்கள் இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோன்று அனைத்து மாநிலங்களிலும் மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பணியாளர்களை தவிர மற்றவர்களுக்கு போக்குவரத்து மற்றும் பேருந்து வசதிகள் வழங்கப்படுவதில்லை.
அத்தியாவசியப் பொருள்களை கொண்டு வரும் சரக்கு வாகனங்கள் மட்டுமே நகரங்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றன. இதனால் நாடே முடங்கியுள்ளது. அடுத்த 20 நாள்களுக்கு இதுதான் நிலை என்பது தெரியவந்துள்ளது. இந்த முடக்கம் மாநிலங்கள் கடந்து பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வெகுவாக பாதித்திருக்கிறது. ஏனென்றால் ஊரடங்கு அறிவிப்பு வெளியான போதே ரயில்கள் இயங்கவில்லை. இதைத்தொடர்ந்து பேருந்துகளும் முடக்கப்பட்டன. இந்நிலையில் பல்வேறு சிறு, குறு தொழிலாளர்களுக்கு ஊரடங்கு நாட்களில் ஊதியம் கிடையாது என முதலாளிகள் தெரிவித்திருக்கின்றனர்.
கொரோனா தொற்று வேகமாக பரவும் நிலையில், ஒரே அறைக்குள் அடைப்பட்டிருக்கும் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு இது பேரதிர்ச்சி தான். இதனால் அவர்கள் தங்கள் குடும்பத்துடன் பாதுகாப்பாக இருக்க சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டனர். ஆனால் சொந்த ஊருக்கு செல்வதற்கு போக்குவரத்தும் இல்லாமல், கையில் போதிய பணமும் இல்லாமல், உண்ண உணவும் இல்லாமல் அவர்கள் அகதிகள் போல ஆகியுள்ளனர்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதும் சிறு, குறு நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 47 கோடி தொழிலாளர்களின் நிலை இதுதான் என ஆய்வுகள் கூறுகின்றன. இவர்களுக்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு சலுகைகள் அறிவித்திருக்கிறார். இருந்தாலும் அவர்கள் அந்த சலுகைகளை பெறுவதற்கு கூட முதலில் தங்கள் வீட்டிற்கு செல்ல வேண்டுமே ? என்பது பிரதான கேள்வியாக இருக்கிறது.
Loading More post
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
'மொழி அரசியலில் ஈடுபடும் எதிர்க்கட்சிகள்' - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
'ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி' - வேதாந்தாவின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்