மதுரையில் கொரோனா காய்ச்சல் என அஞ்சி மூலிகை மருந்து சாப்பிட்ட குடும்பம் பரிதாப நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள குன்னுத்துப்பட்டியைச் சேர்ந்த தம்பதியினர் முத்துக்கருப்பன் - கவிதா. இவர்களின் மகன் திராவிட செல்வம் என்பவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவி வருவதால் அதன் தாக்கத்தால் காய்ச்சல் ஏற்பட்டிருக்கும் என எண்ணிய முத்துக்கருப்பன், வீட்டில் இருந்த மூலிகை மருந்தை திராவிட செல்வத்திற்கு கொடுத்ததாக தெரிகிறது.
மேலும் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்கும் காய்ச்சல் பரவக்கூடாது என எண்ணி மனைவி கவிதா, மகன்கள் பெரியார் செல்வம் மற்றும் விஷ்வா ஆகியோரையும் மூலிகை மருந்தை உட்கொள்ள செய்துள்ளார். மூலிகை மருந்தை உட்கொண்ட நான்கு பேருக்கும் சிறிது நேரத்திலேயே வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது, இதில் பதற்றமடைந்த முத்துக்கருப்பன், நான்கு பேரையும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு ஆம்புலென்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். கொரோனா வைரஸ் பயத்தால் போதிய விழிப்புணர்வு இன்றி முத்துக்கருப்பன் மேற்கொண்ட செயலில் தற்போது அவர் குடும்பம் சோகத்தில் மூழ்கியுள்ளது. இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என மருத்துவர்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி