Published : 21,Mar 2020 01:36 PM

தமிழ்நாட்டில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு

3-more-people-infected-with-coronavirus-in-Tamil-Nadu

தமிழ்நாட்டில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 298 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அதிக காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைத்து நோயாளிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

image

இந்நிலையில் தாய்லாந்திலிருந்து வந்த 2 பேருக்கும், நியூசிலாந்திலிருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் கொரோனாவால்‌ 3 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 6 பேரும் வெளிநாடு‌, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள். இதுவரை தமிழ்நாட்டில் வசித்து வரும் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.

image

ஏற்கெனவே கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சுவாசக் கோளாறு மற்றும் அதிக காய்ச்சலுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைத்து நோயாளிகளையும் கொரோனா அறிகுறிகளுக்காகப் பரிசோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்