Published : 20,Mar 2020 10:50 AM

அஜித்தின் 'வலிமை' திரைப்படம் வெளியாவது தாமதமாகுமா?

Will-Ajith--Valimai-be-delayed-or-will-it-release-in-Diwali-as-announced

அஜித்தின் 'வலிமை' திரைப்படம் வெளியாவது தாமதமாகுமா? அல்லது அறிவிக்கப்பட்டபடி தீபாவளி பண்டிகைக்கு வெளியிடப்படுமா? என்பது குறித்த சந்தேகம் எழுந்துள்ளது.

நடிகர் அஜித்தை வைத்து ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை இயக்கியவர் இயக்குநர் எச்.வினோத். இவரது அடுத்த படமான 'வலிமை'யில் அஜித் மீண்டும் நடித்து வருகிறார். இதில் அஜித் ஒரு போலீஸ்காரராக நடித்து வருவதாகவும் தெரிகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. அதன்பின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தது. அதற்கடுத்து நடந்த படப்பிடிப்பில் அஜித்திற்கு லேசான காயம் ஏற்பட்டதாக தெரியவந்தது. அதனையடுத்து அவர் சிகிச்சை எடுத்து வந்தார். அஜித்தின் உடல்நிலை தேறிய நிலையில் வைசாக் பகுதியில் படப்பிடிப்பு தொடங்கியது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சம் நிலவி வருவதால், இங்கு நடந்து வந்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

image

மேலும் ‘வலிமை’ படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்லவிருந்த திட்டமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் 'போனி கபூர் முன்பே அறிவித்தபடி தீபாவளி பண்டிகையின் போது இந்தத் திரைப்படம் வெளியாகுமா என சந்தேகம் எழுந்துள்ளது. தங்களின் அபிமான நடிகர் நடித்துள்ள ‘வலிமை’ தீபாவளியையொட்டி திரைக்கு வருமா? அல்லது தாமதமாகுமா என அவரது ரசிகர்கள் இப்போது சமூக வலைத்தளத்தில் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்,

‘வலிமை’ பட பைக் சண்டைக் காட்சிக்காக பயிற்சி எடுக்கும் ஹூமா குரேஷி?

இதுவரை 'வலிமை' படப்பிடிப்பு கிட்டத்தட்ட 60 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. மேலும் இப்படத்திற்கான சில பகுதிகளை வெளிநாடுகளில் படமாக்கப்பட வேண்டியுள்ளது. அதற்கான திட்டமிடலை படக்குழு ஏற்கெனவே முடிவு செய்து விட்டது. இருப்பினும், கொரோனா வைரஸ் அச்சத்தை கருத்தில் கொண்டு அதற்கான படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது மீண்டும் எப்போது தொடங்கும் என்பது உறுதி செய்யப்படாத நிலையே நீடிக்கிறது. எனவே, இந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாவது கடினம் என்றே கூறப்படுகிறது. வெளிநாட்டு படப்பிடிப்புக்கள் முடிந்த பிற்பாடு போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை தொடங்க முடியும். அந்த வேலைகள் திட்டமிட்ட படி தொடங்கப்படவில்லை.

image

இதனிடையே ’டைம்ஸ் ஆப் இந்தியா’வுக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, தீபாவளியையொட்டி படத்தை வெளியிடுவதில் இயக்குநரும் படக்குழுவினரும் ஆர்வமாக உள்ளனர் என்றே தெரியவந்துள்ளது. கிடைத்துள்ள இடைவெளியை வைத்து இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளைக் கொண்டு அதற்கான பின் தயாரிப்பு பணிகளை படக்குழு செய்ய தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்