Published : 17,Mar 2020 01:21 PM

கொரோனாவால் ஐபிஎல் நடக்கவில்லை என்றால் தோனியின் நிலை என்ன ஆகும் ? : ஆகாஷ் சோப்ரா

What-will-happen-to-MS-Dhoni-if-IPL-2020-is-cancelled-Aakash-Chopra

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நடக்கவில்லை என்றால் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை என்ன ஆகும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மார்ச் 29ஆம் தேதி தொடங்கயிருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா தாக்கம் தொடர்ந்து இருந்தால் ஐபிஎல் தொடர் முழுவதுமாக ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஐபிஎல் தொடர் நடக்கவில்லை என்றால் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை என்ன ஆகும் என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். தோனி உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு பிறகு இந்திய அணிக்காக எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் விளையாடவுள்ளது ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடரில் அவரது ஆட்டத்திறனை பார்த்துதான் டி20 உலகக் கோப்பை தொடருக்கு அவரை தேர்வு செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்து இருந்தார். ஆனால், தற்போதைய சூழலில் ஐபிஎல் போட்டிகள் நடப்பது கேள்வி குறியாகியுள்ளது.

image


"இந்தியர்கள் பாகிஸ்தானுடன் போர் வேண்டாமென்றே நினைக்கிறார்கள்" ஷோயப் அக்தர் ! 


இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில், “தோனியைப் போன்ற ஒரு வீரருக்கு, ஐபிஎல் ஒரு போதும் அளவுகோலாக இருக்காது. ஐபிஎல் தொடரில் தோனி அதிக ரன்கள் குவிக்கும் பட்சத்தில், தோனியை இந்திய அணிக்கு தேர்வு செய்யுமாறு நிபுணர்கள் சொல்லக் கூடும். இதனை செய்யுங்கள், அதனை செய்யுங்கள் என்று சொல்வார்கள். தோனிக்கு அவர் என்ன செய்கிறார் என்பது தெரியும், அணிக்கு மீண்டும் திரும்ப வேண்டுமா, வேண்டாமா என்பது அவருக்கு தெரியும்.

ஐபிஎல் ஒரு முக்கியமான காரணியாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. அவர் மீண்டும் அணிக்கு திரும்ப விரும்பினால், அவரே தன்னுடைய இருப்பினை வெளிப்படுத்தி விடுவார். தேர்வுக்குழுவினர் அவரை தேர்வு செய்ய விரும்பினால், தானாக அவர் தேர்வாகிவிடுவார். ஏனெனில், அனுபவத்தை சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வாங்க முடியாது.

image


"கொரோனா முன்னெச்சரிக்கையை தவிர்க்கும் சென்னை மக்கள்" - அஷ்வின்‌ வேதனை 


தோனி மிகப்பெரிய அனுபவ வீரர். இந்திய அணிக்கு தோனி தேவை என்றால், ஐபிஎல் தொடரில் அவர் விளையாடினாலும், விளையாடாவிட்டாலும், அவர் அணிக்கு திரும்பிவிடுவார்” என்றார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்