[X] Close

உணவகங்கள் இலவச குடிநீர் வழங்குவது அவசியம்: நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவு!

free-drinking-water-in-multiplex

உணவகங்களில் இலவச குடிநீர் அளிக்கப்படுவதோடு, குடிநீர் இருக்குமிடத்தை தெரிவிக்கும் பலகைகளும் வைக்கப்பட வேண்டும் என நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

பெங்களூரைச் சேர்ந்தவர் சுதா கட்வா. சமூக செயற்பாட்டாளர் ஆன, இவர் பெங்களூரில் உள்ள கே.எப்.சியில் சாப்பிட சென்றார். அந்த உணவகம் அவருக்கு தண்ணீர் தரவில்லை. அதைத் தனியாக வாங்க வேண்டும் என்று கூறியது. இதையடுத்து குடிநீர் என்பது அடிப்படை உரிமை என்றும், அனைத்து உணவகங்களிலும், வாடிக்கையாளர்களுக்கு இலவச குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்றும் கடந்த வருடம் நுகர்வோர் தீர்ப்பாயத்தில் ஒரு ரூபாய் நஷ்டஈடு கேட்டு, மனு தாக்கல் செய்திருந்தார். வாடிக்கையாளர்களுக்கு, இலவச குடிநீர் வழங்கப்படுவதாகவும், அவர்கள் தங்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் ஆகியவற்றை கவுண்ட்டரில் பெற்றுச் செல்லும் வகையில், தங்கள் வர்த்தக நடைமுறை இருப்பதாகவும் கே.எப்.சி. தெரிவித்தது.

குடிநீர் வழங்குவதாக, கே.எப்.சி., நிர்வாகம் கூறினாலும், அதற்கான, நம்பும் வகையிலான ஆதாரம் சமர்ப்பிக்கப்படவில்லை. புகார் அளித்த சுதாவுக்கு, கே.எப்.சி., நிர்வாகம், ஒரு ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும்; வழக்கு செலவாக, 5,000 ரூபாய் தர வேண்டும். குடிநீர் என்பது ஒருவரின் அடிப்படை தேவைகளில் முக்கியமானது. நாம் உணவு உண்ணும் போது, தண்ணீரை தான் முதலில் எடுத்துக் கொள்கிறோம். எனவே, குடிநீரை இலவசமாக வழங்க வேண்டியது உணவகங்களின் கடமை என தீர்ப்பாயம் ஏப்ரல் மாதம் வலியுறுத்தியது.


Advertisement

குடிநீர் இருக்கும் இடத்தைத் தெரிவிக்கும் வகையில் பலகைகள் அமைக்கவேண்டும் என்று சுதா மேலும் ஒரு மனு அளித்ததைத் தொடர்ந்து, குடிநீர் இடத்தைக் குறித்த பலகைகள் உறுதிசெய்யப்படவேண்டும் என பெங்களூரு நுகர்வோர் தீர்ப்பாயம் வலியுறுத்தியுள்ளது.

Related Tags : drinking waterwaterboardbangalore

Advertisement

Advertisement
[X] Close