Published : 16,Mar 2020 10:50 AM
இப்படியா வாதம் செய்வீர்கள்.. விஜயின் ‘நண்பன் அஜித்’ பேச்சும்.. ரசிகர்களின் கோஷ்டி பூசலும்

அஜித் குறித்து விஜய் சொன்னதை வைத்து இரு ரசிகர்கள் இடையே சமூக வலைத்தளத்தில் விவாதம் நடந்து வருகின்றது.
விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு விஜய் கோட் சூட் உடையில் வருகை தந்திருந்தார். நடிகர் விஜய் பேசுவதற்கு முன்பாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மேடையேறினார். அவர் பேசும்போது, “கதையை சொல்லவேயில்லை, உடனே வந்து நடிக்கிறேன் என்றார் விஜய்சேதுபதி. கைதி ஷூட்டிங்போது இந்த வாய்ப்பு வந்தது. நான் போய் விஜய்க்கு கதை சொன்னேன். ‘கைதி’ படப்பிடிப்பு முடிவதற்குள் ‘மாஸ்டர்’ ஓகே ஆகிவிட்டது. இந்தப் படத்திற்கு ‘வாத்தி’ என்றுதான் தலைப்பு வைத்துள்ளதாக நண்பர்களிடம் சொல்லி வைத்திருந்தேன்.
அதன் பிறகுதான் ‘மாஸ்டர்’ என்ற உண்மையை வெளிப்படுத்தினேன். இதில் எல்லா பாடல்களும் சூழலுக்கு தேவையான பாடல்களாகதான் இருக்கும். 129 நாள் எந்த இடைவெளியும் இல்லாமல் ஷூட்டிங் செய்வது சும்மா இல்லை. அது என்னுடைய உதவி இயக்குநர்களால் தான் நடந்தது. கதையை மீறி எந்த விஷயமும் போகக்கூடாது என்று யோசித்துதான் போஸ்டரை முடிவு செய்தோம். அதையேதான் போஸ்டராக வெளியிட்டோம்” என்றார்.
இறுதியாக ‘மாஸ்டர்’ படத்தின் நாயகன் விஜய் பேசினார். அரங்கமே அதிர்ந்தது. விஜய் பேசும்போது, “வாழ்க்கை நதி மாதிரி. நம்மை வணங்குவாங்க, வரவேற்பாங்க. கல் எறிவாங்க. ஆனால், கடமையை செஞ்சுட்டு போயிட்டே இருக்கணும். மக்களுக்கு எது தேவையோ அதைதான் சட்டமாக உருவாக்க வேண்டுமே தவிர, சட்டத்தை உருவாக்கிவிட்டு அதில் மக்களை அடைக்க கூடாது” என்றார்.
மேலும், தொடர்ந்த அவர், “ஒவ்வொரு தடவையும் ரொம்ப மோசமாக ட்ரஸ் பண்ணிட்டு வரேன்னு காஸ்ட்யூம் டிசைனர் கோட் சூட் கொடுத்தாங்க. நானும் ஓகே இந்த டைம் "நண்பர் அஜித்" மாதிரி ஸ்டைலாக கோட் சூட் போட்டு வரலாம்னு நினைச்சேன். நல்லா இருக்கா?” என்றார்.
இந்தப் பேச்சை வைத்து சமூக வலைத்தளத்தில் அஜித் ரசிகர்களை விஜய் ரசிகர்கள் கொஞ்சம் உசுப்பேத்த ஆரம்பித்தனர். ‘விஜய், வெளிப்படையாக அஜித்தைப் பற்றி பேசி இருக்கிறார். அஜித் இப்படி விஜய் பற்றி பேசியுள்ளாரா?’ என்ற கோணத்தில் விவாதத்தை எழுப்பினர். அதற்கு அஜித் ரசிகர்கள், அவரது நாயகன் ஏற்கெனவே பேசியுள்ள வீடியோவை எடுத்துப் போட்டு ஷேர் செய்து வருகின்றனர். ஒருவர், “ நண்பர் அஜித் என்று சொன்ன அந்தப் பெருந்தன்மை அதுக்கு தான் தலைவா கீழே தளபதி வாழ்க என்று சத்தம்வந்தது.. நீங்கள் கிரேட் தலைவா” என்று கூறியிருந்தார்.
#NanbarAjith
— Mahi arsath (@ArsathMahi) March 16, 2020
audio launch-ல நண்பர் அஜித்
சொன்ன அந்த பெருந்தன்மை
அதுக்கு தான் தலைவா கீழே
தளபதி வாழ்க என்று சத்தம்
வந்தது your great தலைவா...?
?????#masterpic.twitter.com/lLKP3sluDO
அதற்கு அஜித் ரசிகர் ஒருவர், “அஜித் எதும் விஜய் பத்தி சொன்னது இல்லைன்னு கதறும் சிலருக்கு, தல எங்களுக்குள்ள போட்டி இருக்கு, பர்சனல் பகை இல்ல” என்று சொன்ன வீடியோ ஆதாரத்தை இணைத்துள்ளார். அதில் அஜித், “எல்லா துறைகளிலும் போட்டி இருக்கும். அதே போல எங்களுக்குள் ஒரு போட்டி இருக்கு. ஆனா நிச்சயமா பகை இல்லை” என்று கூறியுள்ளார். அதை ஒட்டி அஜித், விஜய் ரசிகர்கள் இதனை வைரலாக பரவ செய்து வருகின்றனர்.
அஜித் எதும் விஜய் பத்தி சொன்னது இல்லைன்னு கதறும் சில அணில்களுக்கு... #Valimai ?#தல :: எங்களுக்குள்ள போட்டி இருக்கு, personal பகை இல்ல...#ValimaiDiwali#NanbarAjith
— Mankatha⚔️Manees (@ManeesMankatha) March 16, 2020
pic.twitter.com/pK2rz253XI
இது ஒருபுறம் இருக்க, ‘என்னதான் இசை வெளியீட்டு விழாவில் இருந்தவர் விஜய் ரசிகர்களாக இருந்தாலும், அஜித் என்று சொன்னதும் எவ்வளவு நேரம் கிளாப் செய்தார்கள் பார்த்தீர்களா.. அதுதான் தல அஜித்’ என்று அஜித் ரசிகர்கள் பெருமையுடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். மற்றொரு புறம், அஜித் என்ற வார்த்தையை விஜய் சொன்னதினால் தான் இவ்வளவு ஆரவாரம் என்று விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர். என்னதான் இருந்தாலும், விஜய் அஜித் ரசிகர்கள் இணைந்து நண்பன் அஜித் என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்துள்ளனர்.