[X] Close

வீடியோ கால் மூலமாக தந்தையின் இறுதிச்சடங்கை பார்த்த மகன் - கொரோனா அறிகுறியால் ஏற்பட்ட சோகம்

இந்தியா,கொரோனா வைரஸ்

COVID-19-Gulf-returnee-watches-dads-funeral-from-hospital

கொரோனா அறிகுறி இருப்பதாகக் கருதி மருத்துவமனையில் தனி‌மைப்படுத்திக்கொண்ட மகன், அங்கிருந்தபடியே தனது தந்தையின் இறுதி ஊர்வலத்தை பார்க்க நேர்ந்த சோகம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.


Advertisement

கட்டிலில் இருந்து கீழே விழுந்து சிகிச்சை பெற்று வந்த தனது தந்தையை பார்ப்பதற்காக, கத்தார் நாட்டில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த லினோ அபெல்(30) என்ற இளைஞர், கடந்த 8ஆம் தேதி அவசரமாக சொந்த ஊர் திரும்பினார்.

கொரோனா விவகாரத்தில் தமிழக அரசைப் பாராட்டிய நடிகர் சித்தார்த்!


Advertisement

கொரோனா அச்சுறுத்தல் உள்ள சூழலில் விமானநிலையம் வந்திறங்கிய லினோவுக்கு லேசான இருமல் இருந்ததால், தானாகவே மருத்துவ அதிகாரிகளை அணுகி, கோட்டயம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தச் சூழலில், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த லினோ அபெலின் தந்தை உடல்நலம் மிகவும் மோசமடைந்து கடந்த 9ஆம் தேதி மரணமடைந்தார்.

Image result for kerala son watch dad funeral

ஒரே மருத்துவமனையில் இருந்தபோதிலும் கொரோனா அறிகுறியால் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததால், தனது தந்தையின் உடலை நேரில் பார்க்க முடியாத துரதிர்ஷ்டசாலி ஆனார், லினோ அபெல். பிறகு மருத்துவமனையிலிருந்து தனது தந்தையின் உடல் ஆம்புலன்ஸில் செல்வதை, அறையின் ஜன்னல் வழியாக பார்த்து கண்ணீர் வடித்தார், அந்த இளைஞர். அதன்பிறகு மொபைல் வீடியோ கால் மூலமாக தனது தந்தையின் இறுதிச்சடங்கைப் பார்த்து துடித்துப் போனார், லினோ அபெல்.


Advertisement

இதனையடுத்து தனது நிலை குறித்து அவர், ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், “விமான நிலையத்தில் தாமாகவே முன்வந்து மருத்துவக் குழுவை அணுகியிருக்காவிடில், தனது தந்தையை கடைசியாக ஒரு முறையாவது பார்த்திருக்க முடியும். எனினும் தான் அவ்வாறு செய்ய விரும்பவில்லை. காரணம், தன்னைத் தாக்கி இருந்தால், கொரோனா வைரஸ் பலருக்கும் பரவிவிடும் என்கிற காரணத்தால், தாமாகவே மருத்துவமனையில் சேர்ந்தேன்.

Image result for kerala son watch dad funeral

நாளை பெரும்பான்மையை நிரூபிக்க ம.பி., ஆளுநர் உத்தரவு.. நீடிக்குமா கமல்நாத் அரசு?

ஆகவே, வெளிநாடுகளிலிருந்து வருவோர் தயங்காமல் மருத்துவக்குழுவினரை அணுகி, தங்களது உடல்நிலையை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இதையடுத்து லினோ அபெலிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரியில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. கொரோனா இருக்கிறதா என எழுந்த ஒரே ஒரு சந்தேகம் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத சோகத்தை இளைஞர் லினோ அபெலுக்கு ஏற்படுத்திவிட்டது.


Advertisement

Advertisement
[X] Close