[X] Close

ஜல்லிக்கட்டு போராட்டங்களுக்கு ஆதரவுக் குரல் எழுப்பிய கிரிக்கெட் வீரர்

Cricketer-Mohammad-Kaif-supports-tamils-protest-over-Jallikkattu

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் இந்த போராட்டங்களுக்கு கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் ஆதரவு தெரிவித்துள்ளார்.


Advertisement

தமிழர்களின் பராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி அலங்கநல்லூரில் 21 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் நடந்தது. போராட்டம் நடத்தியவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். கைதுசெய்தவர்களை விடுவிக்கக் கோரியும், பீட்டா அமைப்புக்கு தடை செய்ய வலியுறுத்தியும் அலங்காநல்லூர், சென்னை மெரீனா, சேலம் பெத்தநாயக்கன் பாளையம் ஆகிய இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

இந்தநிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ் சகோதரர்கள் நடத்திவரும் போராட்டத்துக்கு தீவிரம் மற்றும் அர்ப்பணிப்பு வியப்பளிப்பதாக கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஒரு காரணத்துக்காக ஒன்றிணைந்து அர்ப்பணிப்புணர்வுடன் போராடும் அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கைஃப் தனது பதிவில் கூறியிருக்கிறார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close