திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
முதுபெரும் அரசியல் தலைவரும் திமுக பொதுச்செயலாளருமான க.அன்பழகன் (98) காலமானார். அவரது மறைவிற்கு திமுகவினர் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தற்போது சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டில் அன்பழகனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பல முக்கிய பிரமுகர்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக தலைவர் வைகோ, காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் க.அன்பழகன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேட்டியளித்த ரஜினி, பேராசிரியர் அன்பழகன் மறைவு பேரிழப்பு என்று தெரிவித்தார். இதற்கிடையே இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, நடிகர் சத்யராஜ் மற்றும் கனிமொழி, தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, எ.வ.வேலு உள்ளிட்ட திமுகவின் முக்கிய தலைவர்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். நடிகர் சத்தியராஜ் கூறும்போது, க.அன்பழகனின் இறப்பு திராவிட இயக்கத்திற்கு பேரிழப்பு என்றார்.
Loading More post
மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் மீது பாஜக நிர்வாகி சரமாரி தாக்குதல் - பரிதாபமாக உயிரிழப்பு
மே மாதத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணை... வரலாற்றில் முதல்முறை!
ஜம்மு: நெடுஞ்சாலை சுரங்கப்பாதை விபத்து - 10 தொழிலாளர்கள் சடலமாக மீட்பு
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!