Published : 05,Mar 2020 04:48 PM

5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரிய வழக்கு - ஜூன் மாதம் ஒத்திவைப்பு

Madurai-High-Court-branch-postponed-5th--8th-Public-exam-case-to-June-month

5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்துவைத்தது.

மதுரை ஒய்.நரசிங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் லூயிஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழகத்தில் இந்தாண்டு முதல் 5 மற்றும் 8ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் கடந்த ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளார். பொதுத்தேர்வில் தோல்வி அடையும் 5, 8-ம் வகுப்பு மாணவிகள் அடுத்த 2 மாதத்தில் மறுதேர்வு எழுதி தோல்வியடைந்த பாடத்தில் வெற்றிப்பெற வேண்டும்.

image

இந்தச் சிறு வயதில் மாணவ, மாணவிகளை மறுத் தேர்வு எழுத கட்டாயப்படுத்துவது மாணவ, மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாக்கும். இதனால் பள்ளியில் இடை நிற்றல் அதிகரிக்கும். இது குழந்தைகளுக்கான இலவச கட்டாய உரிமைச்சட்டத்தின் எதிரானதாக உள்ளது. எனவே தமிழகத்தில் நடப்பாண்டில் 5, 8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறையை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பாக கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தம், அரசிதழ் வெளியீடு மற்றும் அரசாணையை செயல்படுத்த இடைக்கால தடை விதித்து அதனை, ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

குடிபோதையில் தகராறு : தலையில் கல்லைப் போட்டு வழக்கறிஞர் கொலை

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுத்தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கை ஜூன் முதல் வாரத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்