[X] Close

தடைகளை கடந்து ‘தல’ என ஓடி வந்த ரசிகன் : தழுவிக்கொண்ட தோனி..!

விளையாட்டு

Fan-climbs-barricades-to-shake-hands-with-MS-Dhoni-at-Chepauk-stadium

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சிஎஸ்கே கேப்டன் தோனி நேற்று பயிற்சி மேற்கொண்டார். அப்போது ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் நுழைந்து தோனிக்கு கைக்கொடுத்த விடீயோ காட்சி வைரலாகி வருகிறது.

image

மகளிர் டி20 உலகக் கோப்பை: ஃபைனலில் இந்தியாவுடன் மோதும் ஆஸ்திரேலியா 


Advertisement

13 ஆவது ஐபிஎல் டி20 போட்டிகள் மார்ச் 29 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னையும் மும்பையும் மோதுகின்றன. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வேத கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி பல மாதங்கள் ஆகிவிட்டன என்றாலும் அவரை அவரது ரசிகர்கள் கொண்டாடாத நாளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு தோனியைப் பற்றிய தகவல்களை அவர்கள் ட்ரெண்ட் ஆக்கி வருகிறார்கள்.

image

சர்வதேச போட்டிகளில் தோனி விளையாடாத நிலையில், அடுத்ததாக அவர் விளையாடவுள்ள போட்டி ஐபிஎல் தொடர்தான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மார்ச் 29 ஆம் தேதி தொடங்கவுள்ள 13 ஆவது ஐபிஎல் சீசனில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விளையாட இருக்கிறார். தோனியின் ரசிகர்கள் அவரது ஆட்டத்தைக் காண ஆவலுடன் இருக்கிறார்கள். சென்னை வந்துள்ள தோனி தற்போது வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.

"உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்" மகளிர் அணிக்கு விராட் கோலி வாழ்த்து 

இந்நிலையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பலத்த பாதுகாப்பையும் மீறி ரசிகர் ஒருவர் மைதானத்து்ககுள் ஓடிச்சென்று தோனியின் காலில் விழுந்தார். அப்போது அவரை தூக்கிவிட்ட தோனி ரசிகருக்கு கை குலுக்கினார். பின்பு அந்த ரசிகர் அந்த இடத்தைவிட்டு சென்றார். இதேபோல கடந்தாண்டு கூட ரசிகர் ஒருவர் மைதானத்தில் நுழைந்தார் அப்போது தோனியும் ஓடிஓடி விளையாடி இறுதியில் கைகுலுக்கினார். கடந்தாண்டு அந்த வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close