Published : 08,Jun 2017 08:33 AM

பாஜக வேட்பாளரை அதிமுக ஆதரிக்கும்: இல.கணேசன் பேட்டி

ADMK-will-support-BJP-candidate

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரை அதிமுக ஆதரிக்கும் என பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எம்.பி இல.கணேசன் தெரிவித்தார்.

சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாரதிய ஜனதாக கட்சி குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளரை அறிவித்தால் ஆதரவு அளிக்க பல கட்சிகள் இயற்கையாகவே முன்வரும். அதில் ஒன்று அதிமுக. என்னைப் பொறுத்தவரை அதிமுக ஒரே கட்சி தான்" என்று கூறினார்.

குடியரசுத் தலைவராக இருக்கும் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனிடையே புதிய குடியரசுத் தலைவரை தேந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூலை மாதம் 20 ஆம் தேதி நடைபெறும்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்