Published : 24,Feb 2020 01:28 PM

டெல்லி வன்முறை: பல இடங்களில் மெட்ரோ நிலையங்கள் மூடல்..!

Delhi-violence-metro-stations-closed

டெல்லியில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக பல இடங்களில் மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக மற்றும் எதிரான போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது இந்த இரு போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் டெல்லியின் வடகிழக்கு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் வன்முறை ஏற்பட்டுள்ளதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறையில் காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

image

காதலியை கரம் பிடிக்க ஆணாக மாறிய பெண்.. நீதிமன்றத்தில் தஞ்சம்..! 

இதனிடையே போராட்டத்திற்கு சமூக விரோதிகளே காரணம் என தெரிவித்துள்ள டெல்லி போலீசார், வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், டெல்லியின் நிலைமையை மீட்டெடுக்க அனைத்து வகையான முயற்சிகளுக்கும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

சமந்தா குறித்து பரவிய செய்தி... காட்டமாக பதில் அளித்த அதிதி ராவ்..! 

இந்நிலையில் வன்முறை சம்பவம் காரணமாக டெல்லியின் பல இடங்களிலும் மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவில்லை. நிலைமை கட்டுக்குள் வந்தவுடன், மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல இயக்கப்படும் எனத் தெரிகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்