Published : 07,Jun 2017 04:39 AM
தமிழிசைக்கு 3-வது முறையாக கொலை மிரட்டல்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு 3-வது முறையாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கால்நடை சந்தைகளில், இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது. மத்திய அரசின் இந்த தடை உத்தரவுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன. இதனை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டமும் நடைபெற்றது. ஆனால், மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசி வருகிறார். இதனால் அவருக்கு ஏற்கனவே இரண்டு முறை அடையாளம் தெரியாத நபர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறையினரிடமும், தமிழிசை புகார் கொடுத்தார். ஆனால் யார் மிரட்டல் விடுத்தது என்பதை போலீசார் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.
இந்நிலையில் தமிழிசைக்கு 3-வது முறையாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டல் விடுத்துள்ள கடிதத்தில், மாட்டிறைச்சி விவகாரத்தில் தலையிடக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.