Published : 14,Feb 2020 08:14 AM

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’- விஜய் சேதுபதியுடன் இணையும் நயன்தாரா, சமந்தா..!

Nayanthara-New-Movie-Update-2020

விக்னேஷ் சிவனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘நானும் ரௌடி தான்’. இளசுகள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. பாடல்களும் செம ஹிட் ஆகின.

இந்நிலையில் காதலர் தினமான இன்று வாழ்த்துகளுடன் தனது புதிய படம் குறித்த அறிவிப்பை விக்னேஷ் சிவன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். லலித் குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.

image

"இதுதான் என் முதல் காதல்" ட்விட்டரில் வீடியோவை பகிர்ந்த சச்சின் ! 

ஏற்கெனவே விக்னேஷ் சிவன்- நயன்தாரா காதலில் இருப்பதாக செய்திகள் உலா வரும் நிலையில், நயன்தாராவை வைத்து விக்னேஷ் சிவன் புதிய படத்தை இயக்குகிறார். நயன்தாராவின் புதிய படம் குறித்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்