காதலர் தின பரிசாக விஜயின் ‘மாஸ்டர்’ படத்தின் ‘ஒரு குட்டிக்கதை’ பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளதாக அப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சியில் நடைபெற்று வந்தது. இதனிடையே, ‘பிகில்’ பட வருவாய் ஏய்ப்பு புகார் தொடர்பாக சில தினங்கள் முன்பு படப்பிடிப்பிலிருந்த விஜய்யை, வருமான வரித்துறையினர் சென்னை அழைத்து வந்து 23 மணி நேரத்திற்கும் மேலாக விசாரித்தனர். வருமானவரித்துறை சோதனை முடிவடைந்த நிலையில், ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் விஜய் மீண்டும் கலந்து கொண்டார்.
மாஸ்டர் படிப்பிடிப்புக்கு பல இடையூறுகள் நடைபெற்றது. ஆனால் அது குறித்து எந்தச் சலனத்தையும் காட்டிக் கொள்ளாத விஜய், பெருந்திரளாகக் கூடி நின்ற ரசிகர்கள் மத்தியில் செல்ஃபி எடுத்து, அதனை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்தப் பதிவில் விஜய் ‘நன்றி நெய்வேலி’ எனக் குறிப்பிட்டிருந்தார். அது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவியது.
ஆக, இப்படி சில நாட்களாக சமூக ஊடகம் ஒட்டுமொத்தமாக விஜயின் செய்திகளால் நிரம்பி வழிந்தது. இந்நிலையில் ‘மாஸ்டர்’ படக்குழு ஒரு புதிய அறிவிப்பை நேற்று வெளியிட்டது. அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அவரது ட்விட்டர் பக்கத்தில் வரும் 14 ஆம் தேதி ‘மாஸ்டர்’ படத்தின் முதல் பாடலான ‘ஒரு குட்டிக்கதை’ வெளியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் விஜயின் புதிய தோற்றத்திலான ஒரு போஸ்டரையும் படக்குழு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் " ஒரு குட்டிக் கதை பாடலை மாஸ்டர் விஜய் பாடியுள்ளார் என்றும் வரும் 14 ஆம் தேதி மாலை 5 மணிக்கு இப்பாடல் வெளியாகும்" என தெரிவித்துள்ளார்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!