Published : 05,Jun 2017 10:25 AM

பன்முகத்தன்மையைக் காக்க பயணம் தொடரும்: ஸ்டாலின்

Stalin-Letter-to-DMK-Followers

தளர்ச்சி கண்டு அடிமைப்பட்டுள்ள தமிழகத்தை மீட்கவும், எதேச்சதிகார சக்திகளிடம் இருந்து இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காக்கவும் திமுகவின் பயணம் உறுதியுடன் தொடரும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள மடலில், கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழாவில் பேசிய தேசிய தலைவர்கள், தற்போதுள்ள சூழ்நிலையில் தமக்குள்ள பொறுப்பைச் சுட்டிக் காட்டி, என்மீது நம்பிக்கை தெரிவித்திருப்பதை அக்கறையுடன் உணர்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக நாட்டில் எதேச்சதிகாரம் எக்காரணம் கொண்டும் தலைதூக்கி விடாமல் தடுக்கவும், மாநில உரிமைகளைப் பறித்து கூட்டாட்சி தத்துவத்தின் உன்னத நோக்கத்தை சீர்குலைக்கும் சக்திகளை எதிர்க்கவும் திமுக எஃகு போன்ற வலிமையுடன் தொண்டாற்றும் என்று ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்