[X] Close

தாத்தாடா: 97 வயதில் எம்.ஏ எழுதிய அசராத ’இளைஞர்’!

97-year-old-man-writes-exam-in-Patna

97-வயதில் எம்.ஏ தேர்வு எழுதி அசத்தியுள்ள ’இளைஞரு’க்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

பாட்னாவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் வைஷ்யா. வயது 97. நடக்கக் கொஞ்சம் சிரமப்படும் அந்த ’இளைஞர்’ கடந்த வியாழக்கிழமை எம்.ஏ. தேர்வு ஹாலுக்குள் நுழைந்ததும் அங்கிருந்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அதிர்ச்சி. ஹால் டிக்கெட்டை காண்பித்துவிட்டு நேராக தனது எண் எழுதப்பட்டிருக்கும் டேபிளில் உட்கார்ந்தார். எல்லோரும் அவரையே திரும்பிப் பார்த்தனர். மூன்று மணி நேரம் நடந்த தேர்வை மூச்சு விடாமல் எழுதினார். பெல் அடித்ததும் பேப்பரைக் கொடுத்துவிட்டு நடந்தார் ராஜ்குமார். 
’இந்த வயசுல படிச்சு...’ என்று ராஜ்குமாரிடம் விசாரித்தால், ‘அது பழைய கனவுப்பா’ என்று ஆரம்பிக்கிறார்.

‘ 1920-ல பரேலியில பிறந்தேன். ஆக்ரா யுனிவர்சிட்டியில 1938-ல டிகிரி முடிச்சேன். 1940-ல டிகிரி கையில கிடைச்சுடுச்சு. அப்பலாம் நாட்டுக்கு சுதந்திரமே கிடைக்கல. எனக்கு போஸ்ட் கிராஜுவேட் பண்ணணும்னு ஆசை. குடும்ப சூழ்நிலை காரணமா படிக்க முடியலை. பிறகு வேலைக்கு போயிட்டேன். ஜார்கண்ட்ல தனியார் நிறுவனத்துல வேலை பார்த்தேன். 1980-ல ரிடையர் ஆனேன். எனக்கு பொருளாதாரம் படிக்கணும்னு ஆசை இருந்தது. ரொம்ப நாளா தள்ளிப்போயிட்டே இருந்தது. இப்பதான் சில வருஷங்களுக்கு முன்னால அப்ளை பண்ணினேன். தினமும் கண்முழிச்சு படிச்சேன். நல்லா தயார் பண்ணிட்டு எக்ஸாம் எழுதிட்டிருக்கேன். கண்டிப்பா பாஸ் பண்ணிடுவேன். எனக்கு ஆங்கிலமும் இந்தியும் தண்ணி பட்ட பாடு. எம்.ஏ மட்டும் பாஸ் பண்ணிட்டேன்னா, ரொம்ப வருஷமா நிறைவேறாம இருந்த என் ஆசை நிறைவேறிய சந்தோஷம் கிடைக்கும் ’என்கிற ராஜ்குமாருக்கு நடப்பதில் மட்டும் சிரமமிருக்கிறது. மற்றபடி கண்பார்வையில் இருந்து எல்லாமே தெளிவாக இருக்கிறது.


Advertisement

‘கொஞ்ச நாளுக்கு முன்னால கால்ல ஒரு ஆபரேஷன். அதனாலதான் நடக்க சிரமம். இந்த வயசுலயும் நான் என்னை நிரூபிச்சிருக்கேன். முயற்சி பண்ணினா எதையும் சாதிக்க முடியும். அதுக்கு நானே உதாரணம்’ என்கிற ராஜ்குமாருக்கு பி.எச்.டி பண்ணும் ஐடியா இல்லையாம். 

தாத்தாடா...!


Advertisement

Advertisement
[X] Close