
ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுளை வெளியிட தாமதம் செய்வதாக திமுக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. எடப்பாடி, சங்ககிரி, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் நடப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இன்று விசாரிக்க வாய்ப்பில்லை என்றும் முடிவுகள் வெளியான பிறகு நாளை விசாரிப்பதாகவும் நீதிமன்றம் தகவல் தெரிவித்தது. மேலும் மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என்றும் மனுத்தாக்கல் நடைமுறைகள் முடிந்தால் நாளை காலை முறையிடுங்கள் எனவும் திமுகவிடம் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
அரசு, தேர்தல் ஆணையத்திற்கு வழக்கின் ஆவணங்களை முன்கூட்டியே அளிக்க வேண்டும் எனவும் நாளை மதியம் வழக்குகளை தலைமை நீதிபதி கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகே விசாரிக்க இயலும் தெரிவித்தது. இதனால் இதுகுறித்த மனு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.