Published : 03,Jun 2017 03:45 AM

கட்சி பணியை மீண்டும் தொடர்வேன்: தினகரன் பேட்டி

Will-continue-party-work--TTV-Dhinakaran

கட்சிப்பணிகளை மீண்டும் தொடர்வேன் என்று டிடிவி தினகரன் இன்று கூறினார்.

டெல்லியில் இருந்து சென்னை திரும்புவதற்காக டெல்லி விமான நிலையம் வந்த டிடிவி தினகரன், செய்தியாளர்களிடம் பேசும்போது இவ்வாறு சொன்னார். அவர் மேலும் கூறும்போது, என்னை கட்சியில் இருந்து நீக்கியதாக யாரும் அறிவிக்கவில்லை. கட்சியில் இருந்து என்னை நீக்க பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. மத்திய அரசுக்கு பணிந்து தமிழக அரசு செயல்பட வாய்ப்பில்லை’ என்றார்.

இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கில் ஜாமீனில் விடுதலையான டிடிவி தினகரன் வழக்கமான நடைமுறைகளுக்கு பிறகு நேற்றிரவு 9.30 மணி அளவில் சிறையில் இருந்து வெளியே வந்தார். இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர் 11.30 மணி அளவில் சென்னை வந்தடைவார் எனத் தெரிகிறது.

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், ஏப்ரல் 25ஆம் தேதி தினகரன் கைது செய்யப்பட்டார். 37 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு தினகரன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்