[X] Close

“போராட்டம் குறித்து ஆலோசிக்க வாருங்கள்” - ஸ்டாலினுக்கு மம்தா அழைப்பு

இந்தியா

Mamata-Banerjee-wrote-letter-DMK-Leader-MK-Stalin

குடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் குடியுரிமை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக போராடுவது குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், எதிர்க்கட்சிகள் பங்கேற்ற கண்டனப் பேரணி நடைபெற்றது. இந்நிலையில் மம்தா பானர்ஜி ஸ்டாலினுக்கு போராட்டம் குறித்து ஆலோசிக்க கடிதம் எழுதியுள்ளார்.

image


Advertisement

அந்தக் கடிதத்தில் குடியுரிமை சட்டத்திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றால் நாட்டின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இந்த மோசமான ஆட்சிக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும், இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்ற அமைதியான, தீவிரமான போராட்டங்கள் தேவை எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்காக நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்றும், போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து ஆலோசிக்க வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close