[X] Close

‘பானி பூரி விற்றது முதல் முச்சதம் அடித்தது வரை’ - ரூ2.40 கோடிக்கு ஏலம் போன ஜெய்ஸ்வால்

விளையாட்டு

Yashavi-Jaiswal-picked-by-RR-for-Rs-2-40-crore

சிறுவயதில் பானி பூரி விற்ற சிறுவனுக்கு இப்போது 19 வயதுக்குப்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைத்தது மட்டுமல்லாமல், ஐபிஎல் டி20 தொடரில் ராஜஸ்தான் அணியிலும் விளையாட இருக்கிறார். ஆம், இளம் வீரர் யாஷ்வி ஜெய்ஸ்வாலை ரூ2.40 கோடி கொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.


Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம், பதோகி அருகே சூர்யா நகரைச் சேர்ந்தவர் யாஷ்வி ஜெய்ஸ்வால். இவரின் தந்தை சிறிய கடை நடத்தி வருகிறார். தன்னுடைய 11-வயதில் மும்பைக்குப் குடிபெயர்ந்தார் ஜெய்ஷ்வால். அவர் மும்பை மாநகருக்கு வந்த நோக்கமே கிரிக்கெட்டில் எப்படியாவது மிகப்பெரிய வீரராக உருவாக வேண்டும் என்பதுதான். ஆனால், அவருக்கு மும்பையில் எதுவும் எளிதாக கிடைக்கவில்லை.

Image result for yashasvi jaiswal


Advertisement

முஸ்லிம் யுனைடெட் மைதானம் அருகே பிளாஸ்டி தார்ப்பாயில் ஒரு குடிசை அமைத்து ஜெய்ஸ்வால் தங்கி, பெரும்பாலான நேரங்களில் பானிபூரி தயாரிக்கும் கடையில் வேலை பார்த்துள்ளார். மீதமுள்ள நேரத்தில் கடுமையாக கிரிக்கெட் விளையாடிய ஜெயஸ்வாலை, பயிற்சியாளர் கண்டுகொண்டு மும்பையின் கில்ஸ் ஷீல்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டியில் 319 ரன்களை ஜெய்ஸ்வால் விளாசினார். இது நடந்தது 2015-இல்.

Image result for yashasvi jaiswal

அதன்பின் நடந்த விஜய் ஹசாரே போட்டியில் (லிஸ்ட் ஏ) ஜெய்ஸ்வால் 154 பந்துகளில் 203 ரன்கள் சேர்த்து அனைவரின் கவனத்தையும் ஜெய்ஸ்வால் ஈர்த்துள்ளார். இதையடுத்து 19 வயதுக்குப்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாட இடம் கிடைத்தது. அடுத்த ஆண்டு ஜனவரி பிப்ரவரி மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் வயதுக்குப்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டியில் ஜெய்ஸ்வால் இந்திய அணிக்காக விளையாட உள்ளார் ஜெய்ஸ்வால்.


Advertisement

EXCLUSIVE: अंडर-19 विश्व कप जीतने का मौका एक बार मिलता है : यशस्वी जयसवाल

ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டது குறித்து ஜெய்ஸ்வால் கூறுகையில், "ராஜஸ்தான் ராயல்ஸ் அணி என்னைத் தேர்வு செய்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஏராளமான விஷயங்களை கற்றுக் கொள்ள எனக்கு இது சிறந்த வாய்ப்பு. என் கிரிக்கெட் வாழ்க்கையைச் சிறப்பாக்க இது எனக்குக் கிடைத்த சிறந்த அடித்தளமாகப் பார்க்கிறேன். நான் சிறுவயதில் பானிபூரி விற்றுக் கொண்டே வீரர்கள் என்னைப் பலரும் கிண்டல் செய்வார்கள். ஆனால், அதைப் பெரிதாகப் பொருட்படுத்தாமல், கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தினேன். எப்போது பணம் கிடைக்கிறதோ, சாதகமான நேரம் கிடைக்கிறதோ அப்போது சாப்பிடுவேன். மிகுந்த கஷ்டத்தோடு வாழ்ந்துவந்த எனக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close