[X] Close

ஓடும் பேருந்தில் நூதன திருட்டு - சிசிடிவியில் சிக்கிய பெண்கள்

Puducherry-police-identified-Women-theft-gang-by-CCTV-Footage

புதுச்சேரியில் ஓடும் பேருந்துகளில் நூதன முறையில் திருடும் பெண்கள் கும்பலை சிசிடிவி காட்சி அம்பலப்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் ஓடும் பேருந்தில் அதிகளவு உடமைகள் திருடுபோவதாக பயணிகளிடமிருந்து தொடர் புகார்கள் வந்தன. இதனால் தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். 

    


Advertisement

அதில், கடந்த மாதம் 8ஆம் தேதி கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு வந்த தனியார் பேருந்து சிக்னலில் நின்றபோது, கருப்பு பர்தா அணிந்த பெண் பயணி ஒருவர் சூட்கேசுடன் இறங்கும் காட்சிகள் இருந்தன. அவரைத் தொடர்ந்து பின்னால் வந்த ஒரு பெண் சூட்கேசில் இருந்த பொருளை திருடி தனது கைப்பைக்குள் போடும் காட்சியும் பதிவாகியுள்ளது.

இந்தக் காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது சேலத்தை சேர்ந்த பெண்கள் குழு என்பதை கண்டுபிடித்தனர். அந்த திருட்டுக் கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். மேலும், பேருந்தில் செல்லும் பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close