Published : 28,Nov 2019 07:21 AM

"எதிர்காலத்தில் முதல்வராவார் அஜித் பவார்"- தொண்டர்கள் ஒட்டிய பதாகையால் புது குழப்பம்

Ajith-Pawar-will-become-CM-in-future--Supporters-stirs-political-situation

மகாராஷ்டிரா மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய அஜித்பவார், எதிர்காலத்தில் முதல்வராவார் என அவரது தொண்டர்கள் பதாகைகளை வைத்துள்ளனர். 

Image result for ajit pawar supporters

மாகாராஷ்டிர முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று பதவியேற்க இருக்கும் நிலையில், அஜித் பவாரின் தொண்டர்கள் புனேயில் உள்ள அவரது பாராமதி தொகுதியில் பிரமாண்ட பதாகைகளை வைத்துள்ளனர். அதில் எதிர்காலத்தில் அஜித்பவாரின் தலைமையிலான அரசு அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Image result for ajit pawar supporters

மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியானதிலிருந்து ஒருமாதத்திற்கு மேலாக நீடித்துவந்த அரசியல் குழப்பம் தற்போது தணிந்துள்ள நிலையில், இது போன்ற பதாகைகள் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்