Published : 22,Nov 2019 07:21 AM

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா ஷூ, சாக்ஸ்

Government-school-students-will-get-shoes

அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா ஷூ, சாக்ஸ் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

வரும் கல்வியாண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஷூ மற்றும் சாக்ஸ் இலவசமாக வழங்க பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா காலணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. காலணிகளுக்கு பதில் ஷூ மற்றும் சாக்ஸ் வழங்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. தற்போது அதை நடைமுறைபடுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதை செயல்படுத்த 66 கோடி ரூபாய் செலவாகும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்