Published : 21,Nov 2019 07:30 AM

கடித்துக் குதறிய வேட்டை நாய்கள்: கர்ப்பிணி பெண் உயிரிழப்பு!

Pregnant-woman-killed-by-dogs-in-France-during-hunt-in-forest

பிரான்ஸில் கர்ப்பிணி பெண் ஒருவர் வேட்டை நாய்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸின் ரெட்ஸ் வனப்பகுதியில் 29 வயதான எலிசா என்ற பெண் தனது வளர்ப்பு நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது திடீரென தனது கணவரை தொலைப்பேசியில் அழைத்து தன்னை வேட்டை நாய்கள் கூட்டம் தாக்க வருவதாக தெரிவித்துள்ளார். உடனே அவரது கணவர் எலிசா இருக்கும் இடத்திற்கு விரைந்துள்ளார். அங்கு சென்று பார்த்தபோது எலிசா இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது கணவர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். 

உடற்கூறு பரிசோதனையில் 30-க்கும் மேற்பட்ட நாய்கள் அவரது கைகள், கால்கள், உடல் மற்றும் தலையில் கடித்ததே அவரது உயிரிழப்புக்கு காரணம் என தெரியவந்தது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்