[X] Close

இனக்கலவரம் குறித்த பாடங்களை நீக்க கோரிக்கை

Request-to-remove-subjects-on-ethnic-issues

பள்ளிப் பாடப்புத்தகங்களில் இருந்து மத, இன ரீதியான மோதல்கள் குறித்த பாடங்கள் நீக்கப்பட வேண்டும் என இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தின் புதிய தலைவர் பிராஜ் பிகாரி குமார் தெரிவித்துள்ளார். 
6 மற்றும் 7ஆம் வகுப்புகளில் இந்து -முஸ்லீம் கலவரம் குறித்த பாடங்களை வைப்பது நன்மை தரக்கூடியது இல்லை என்றும் 12ஆம் வகுப்பில் கூட இத்தகைய பாடங்கள் இருக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
இத்தகையப் பாடங்கள் மாணவர்களை கல்வியாளர்களாக மாற்றாது என்றும் அவர் கூறியுள்ளார். வரலாறு மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகங்களை எழுதியவர்கள் தங்களுடைய தனிப்பட்ட கருத்துகளை அதில் திணித்துள்ளனர் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.


Advertisement
Related Tags : schoolsubjectsethnic issuesremoverequest

Advertisement

Advertisement
[X] Close