[X] Close

கருணாநிதியிடம் கிள்ளுப்பட்ட கன்னம்: கமல் நெகிழ்ச்சி

kamalhasan-birthday-wishes


திமுக தலைவர் கருணாநிதி, தனக்கு தமிழ் கற்றுக்கொடுத்த ஆசான் என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். 

கருணாநிதியின் 94ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வீடியோ மூலம் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள கமல்ஹாசன் அதில் கூறியிருப்பதாவது:
கருணாநிதியின் வசனங்களை சரியாக சொல்லத் தெரிந்தவர்கள் நடிக்கத் தகுதி பெற்றவர்கள். நல்ல படங்கள் எடுத்த போதெல்லாம் அவரிடம் காண்பிப்பேன். அப்போது எங்கள் இருவரிடையே உறவு வலுத்தது. கருணாநிதி கையால் கிள்ளுப்பட்ட கன்னம் எனது கன்னம். கருணாநிதி மூத்த அரசியல் தலைவர் மட்டுமல்ல, தமிழறிஞர், சிறந்த வசனகர்த்தா. எனக்கு தமிழ் கற்றுத் தந்த மூவரில் கருணாநிதியும் ஒருவர். கலைஞரை எனது தமிழ் ஆசான் என்று கூறினேன். எம்ஜிஆரும் அதனைப் பாராட்டினார்.
கருணாநிதியுடனான என்னுடைய தொடர்பு அரசியல் கடந்தது. என் கலை உலகிற்குத் தொடர்பில்லாதது, என் உலகிற்குத் தேவையானது. அவரை வாழ்த்த வயது தேவையில்லை, மனமிருந்தால்போதும், வாழ்க கருணாநிதி. இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close