சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக 3 பேராசிரியர்களிடம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
சென்னை கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் கடந்த 8ஆம் தேதி ஐ.ஐ.டி. விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். INTERNAL MARK குறைவாக எடுத்ததால் பாத்திமா தற்கொலை செய்து கொண்டதாக ஐ.ஐ.டி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பாத்திமாவின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் கூறியுள்ளனர்.
தனது தற்கொலைக்கு 3 பேராசிரியர்களே காரணம் என செல்போனில் பாத்திமா பதிவு செய்து வைத்திருந்த குறிப்பு வெளியான நிலையில், பாத்திமா தற்கொலை வழக்கு கோட்டூர்புரம் காவல்துறையினரிடம் இருந்து மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. கூடுதல் துணை ஆணையர் மெகலினா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் பாத்திமா தற்கொலை தொடர்பாக ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் 3 பேரிடம் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். ஐ.ஐ.டி.யில் பாத்திமாவின் செயல்பாடு, தேர்வுகளில் அவர்பெற்ற மதிப்பெண்கள் ஆகியவை குறித்து பேராசிரியர்களிடம் கேட்கப்பட்டதாக தெரிகிறது. பாத்திமாவின் நண்பர்களிடமும் விசாரணை நடத்திய காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளையும் சேகரித்துள்ளனர்.
இதனிடையே, மாணவி ஃபாத்திமா தற்கொலைக்கு காரணமான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக மாணவரணியினர் போராட்டம் நடத்தினர். சென்னை ஐஐடி நுழைவு வாயில் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது ஐஐடி நிர்வாகத்தை கண்டித்து முழக்கங்கள் எழுப்பட்டன. உயிரிழந்த மாணவி பாத்திமா குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், அவரின் உயிரிழப்புக்கு காரணமாக பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Loading More post
நெல்லை கல்குவாரி விபத்து: பெரும் போராட்டத்துக்குப் பின் 4-வது நபர் சடலமாக மீட்பு
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?