[X] Close

மீண்டும் ஹாட்ரிக் விக்கெட் - அசத்திய தீபக் சாஹர் 

Deepak-Chahar-takes-second-hatrick-in-two-days

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் தீபக் சாஹர் சையத் முஸ்தாக் அலி டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

சையத் முஸ்தாக் அலி டி20 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியும் விதர்பா அணியும் மோதியது. இந்தப் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. ஆட்டத்தின் தொடக்கத்தில் மழை பெய்ததால் 13 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 


Advertisement

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய விதர்பா அணி சீரான இடைவேளையில் விக்கெட்களை இழந்து கொண்டே வந்தது. விதர்பா அணியின் ஆட்டத்தின் கடைசி ஓவரை ராஜஸ்தான் அணியின் தீபக் சாஹர் வீசினார். அவர் கடைசி மூன்று பந்துகளில் ஸ்ரீகாந்த் வாக், தர்ஷன், அக்‌ஷே வாட்கர் ஆகிய மூவரையும் ஆட்டமிழக்க செய்து ஹாட்ரிக் சாதனையைப் படைத்தார். விதர்பா அணி 13 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் குவித்தது. அசத்தலாக பந்துவீசிய தீபக் சாஹர் 18 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். 

விஜேடி முறைப்படி ராஜஸ்தான் அணிக்கு இலக்கு 106 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 13 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்தது. இதனால் விஜேடி முறைப்படி விதர்பா அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.  கடந்த ஞாயிற்றுகிழமை பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் சிறப்பாக பந்துவீசிய தீபக் சாஹர் ஹாட்ரிக் உட்பட 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இரண்டு நாள் கழித்து மீண்டும் அவர் உள்ளூர் போட்டியில் ஹாட்ரிக் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close