[X] Close

டெல்லி காற்று மாசுபாட்டை குறைக்க புது யோசனை சொன்ன விஞ்ஞானி சிவதாணு..!

sivathanu-speech-about-delhi-air-pollution

டெல்லியில் காற்று மாசு ஏற்படுவதை தடுக்க பஞ்சாப் , ஹரியானா , மகாராஷ்டிரா மாநிலங்களில் விவசாய கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என ஏவுகணை முன்னாள் விஞ்ஞானி சிவதாணு பிள்ளை தெரிவித்துள்ளார். 


Advertisement

பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் ஏவுகணை விஞ்ஞானியான சிவதாணு பிள்ளை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டார். 


Advertisement

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “டெல்லியில் காற்று மாசு ஏற்படுவதை தடுக்க பஞ்சாப் , ஹரியானா , மகாராஷ்டிரா மாநிலங்களில் விவசாய கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இது தொடர்பான திட்டம் தயாரிக்கப்பட்டு ஏற்கெனவே அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் விவசாய கழிவுகளை எரிப்பதால் தான் காற்று மாசு ஏற்படுகிறது. இதற்கு மாற்று திட்டங்களை விரைவில் செயல்படுத்தினால்தான் டெல்லியில் காற்று மாசு குறையும்” எனத்  தெரிவித்தார். 


Advertisement

Advertisement
[X] Close