Published : 27,May 2017 08:56 AM

வேலைவாய்ப்பை உருவாக்க விஜயகாந்த் வலியுறுத்தல்

Vijayakanth-insisted-on-creating-employment-for-youngsters

தொழில்துறையில் முழு கவனத்தை செலுத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க, தமிழகத் தொழிற்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஐடி துறையில் பணிபுரியும் தொழிலாளர்களை லே ஆப் முறையில் பல ஐடி நிறுவனங்கள், முன்னறிவிப்பு இன்றி பணி நீக்கம் செய்துவருவதாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார். 
தமிழகத்தில் இருந்து கியா மோட்டர்ஸ் போன்ற பல தொழில் நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்குச் சென்றுவிட்டன என்றும் அவர் கூறியுள்ளார். தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் இனிமேலாவது விழித்தெழுந்து உடனடியாக ஐடி துறை மட்டுமல்லாது அனைத்து தொழில்துறையிலும் கவனம் செலுத்தி அவற்றில் பணிபுரிபவர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்