[X] Close

வேதனை வெள்ளி: ஒரே நாளில் 17 பேர் பலி!

17-dead-in-Various-accident-Yesterday

தமிழகத்திற்கு வேதனை நாளாக நேற்றைய வெள்ளிக்கிழமை அமைந்தது. பல்வேறு விபத்துகளில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 


Advertisement

வேலூர் மாவட்டத்திலிருந்து 26 பேர் நீலகிரிக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் வந்த வேன் குன்னூர் அருகே கீழ்தட்டப்பள்ளம் பகுதியில் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 4 பேருக்கு கோவை, மேட்டுப்பாளையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 10 பேர் கோத்தகிரியில் சிகிச்சை பெறுகின்றனர்.

சேலம் ஆத்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு மினி வேன் சென்றுகொண்டிருந்தது. வேடசந்தூர் கருக்காம்பட்டி அருகே வேன் வந்து கொண்டு இருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து நசுங்கியது. இதில் வேனில் பயணித்த 8 வயது சிறுவன் உட்பட 3 பேர் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பலியாகினர். 12 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.


Advertisement

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மின்னல் தாக்கியதில் அரிசி ஆலை இடிந்து விழுந்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே கலத்தூர் கிராமத்தில் மின்னல் தாக்கியதில் மணிகண்டன் (24), ஞனவேல் (14) ஆகியோர் பலியானார்கள். 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில், பாதாள சாக்கடை கால்வாய்க்கு பள்ளம் தோண்டிய போது மண் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close