Published : 01,Nov 2019 05:44 AM

மானியமற்ற வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு

Non-subsidy-LPG-cylinder-rate-increased-from-today

மானியம் இல்லாத வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 76 ரூபாய் அதிகரித்துள்ளது. 

மானியம் இல்லாத வீட்டு உபயோக சிலிண்டரின் விலை இன்று முதல் 76 ரூபாய் உயர்ந்து 696 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவே முந்தைய அக்டோபர் மாதத்தில் மானியம் இல்லாத வீட்டு உபயோக சிலிண்டர் 620 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போதைய விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது மாதமாக மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்