Published : 31,Oct 2019 03:27 PM

ராகுல்காந்தியின் திடீர் வெளிநாட்டுப் பயணம்: விமர்சித்த பாஜக!

Rahul-Gandhi-goes-on-meditation-tour--BJP-asks-why-meditate-abroad

தியானத்துக்காக ராகுல் காந்தி வெளிநாடு சென்றுள்ளது குறித்து பாஜக விமர்சித்துள்ளது.

தியானப் பயிற்சிக்காக ராகுல் காந்தி 10 நாட்களுக்கு வெளிநாடு சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை பாரதிய ஜனதா தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் அமித் மாளவியா விமர்சித்துள்ளார். உயர்ந்த பாரம்பரியத்துடன் தியானப் பயிற்சியின் மையமாக இந்தியா விளங்குகிறது என்றும் அப்படியிருக்கும்போது, தியானப் பயிற்சிக்காக ராகுல் அடிக்கடி ரகசியமாக வெளிநாடு செல்வது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

ராகுல் உச்சபட்ச பாதுகாப்பில் இருக்கும் தலைவர் என்றிருக்கும்போது அவரது பயணம் பற்றி காங்கிரஸ் ஒவ்வொரு முறையும் வெளிப்படையாக அறிவிக்காமல் ரகசியமாக வைத்திருப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். இதனிடையே ராகுல் எந்த நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் என்ற தகவலை காங்கிரஸ் வெளியிடவில்லை. 

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் வரும் 5ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நாடு தழுவிய போராட்டம் நடக்க உள்ள நிலையில், ராகுல் காந்தி திடீரென வெளிநாட்டுக்கு சென்றுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்