Published : 25,Oct 2019 09:33 AM
இஸ்லாமிய இளைஞர் உணவு டெலிவரி : ‘சுவிக்கி’ ஆர்டரை கேன்சல் செய்த நபர்

இஸ்லாமிய இளைஞர் டெலிவரி செய்ததால் உணவை வாங்க மறுத்தவர் மீது ஸ்விகி நிறுவனம் புகார் அளித்துள்ளது.
ஐதராபாத்தில் ஸ்விகி செயலி மூலம் ஒருவர் உணவு ஆர்டர் செய்துள்ளார். அதை இந்து இளைஞர் மூலம் டெலிவரி செய்யும்படி வலியுறுத்தியுள்ளார். ஆனால் அதற்கான வசதி இல்லாததால் ஸ்விகி நிறுவனம், இஸ்லாமிய இளைஞர் மூலம் உணவை டெலிவரி செய்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் உணவை வாங்க மறுத்து திருப்பி அனுப்பியுள்ளார். இதனால் அந்த நபர் மீது ஸ்விகி நிறுவனப் பிரதிநிதி முதாசிர் சுலேமான் என்பவர் புகார் அளித்துள்ளார். இதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்து மதம் அல்லாதவரிடம் உணவைக் கொடுத்து அனுப்பியதால் மத்திய பிரதேசத்தில் வாடிக்கையாளர் ஒருவர் ஆர்டரை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.