Published : 25,May 2017 04:18 AM

எதிர்க்கட்சி தலைவர்களுக்கு சோனியா நாளை விருந்து!

Sonia-Gandhi-tomorrow-party-to-Opposition-leaders

முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி நாளை அளிக்கவுள்ள மதிய விருந்தின்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்திலேயே நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும், மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத், ஐக்கிய ஜனதா தளத்தின் சரத் யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

மமதா பானர்ஜி, சோனியா காந்தியுடன் தனியாக இன்று சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மதிய விருந்து கூட்டத்திற்கு சிபிஎம், சமாஜ்வாதி கட்சி, திமுக. தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு பொதுவான வேட்பாளரை நிறுத்துவதுடன் குஜராத், ஹிமாசலப் பிரதேசம், கர்நாடக சட்டப்பேரவைகளுக்கு நடைபெறும் தேர்தலுக்கான கூட்டணியாக உருவாக்கவும் முயற்சி எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்