[X] Close

தோனியிடம் ஆலோசனை கேட்க தயங்க மாட்டேன்: விராத் கோலி

MS-Dhoni-is-the-most-intelligent-cricketer-around--Virat-Kohli

மைதானத்தில் தோனியின் ஆலோசனைகளைக் கேட்கத் தயங்க மாட்டேன் என்று இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளார்.


Advertisement

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் தொடர் மகராஷ்ட்ரா மாநிலம் புனேவில் நாளை தொடங்குகிறது. இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகிய பின்னர் நடக்கும் முதல் தொடர் என்பதால், புதிய கேப்டன் விராத் கோலி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த கோலி, மைதானத்தில் தோனியை போல புத்திசாலித் தனமாக செயல்படும் கேப்டன் யாருமில்லை. குறிப்பாக நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் டிஆர்எஸ் முறையைப் பயன்படுத்துவதில் அவரது நுணுக்கமான அறிவை நேரில் கண்டு வியந்திருக்கிறேன். எதிர்காலங்களில் தோனியிடம் ஆலோசனைகளைப் பெற தயங்கமாட்டேன். உள்ளூர் போட்டிகளில் முழுமையான திறமையைக் காட்டியதன் மூலமே யுவராஜ் சிங்க்குக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது என்று விராத் கோலி தெரிவித்தார். இந்த தொடரில் முதல்முறையாக விராத் கோலியின் தலைமையின் கீழ் தோனி முழுநேர விக்கெட் கீப்பராக விளையாடவுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close