[X] Close

தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள் - சில பூத்களில் குறைந்த வாக்குப் பதிவு

people-Boycott-nanguneri-election

நெல்லை நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட சில கிராமங்களில் தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்கக்கோரி தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், சில கிராமங்களில் குறைவான வாக்குகளே பதிவாகின. 

நாங்குநேரி தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது. இதனிடையே குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திரகுலத்தார், பள்ளர், வாதிரியார் ஆகிய ஏழு பிரிவுகளை தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்கக்கோரி 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் கருப்புக் கொடியேந்தி போராட்டம் நடைபெற்றது.


Advertisement

இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக பல கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பிலும் சிலர் ஈடுபட்டனர். இதனால், சில இடங்களில் வாக்குப் பதிவு குறைந்து காணப்பட்டது. 3 மணி நிலவரப்படி நாங்குநேரி தொகுதியில் பதிவான வாக்கு சதவீதம் 52.18 ஆக உள்ளது. ஆனால் கீழே உள்ள கிராமங்களில் மிகவும் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன. 

பூத் 210 அரியகுளம் வாக்குச்சாவடியில் -  9.38 % 

பூத் 265 சவளைக்காரன் குளம் - 15.44 %

பூத் 284 பரப்பாடி - 15.76 %  

பூத் 286 பரப்பாடி - 20.72 %

பூத் 190 சிவந்திப்பட்டி - 24.71%

பூத் 220 மூலக்கரைப்பட்டி - 22%

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close