[X] Close

‘கேப்டன் நான்தான் ஆனா டாஸ் சொல்லப் போறது இவர்’ - தொடரும் டூப்ளஸிஸ் சோகம்

Virat-Kohli-in-splits-after-du-Plessis-------proxy-captain----theory-fails-at-toss-of-3rd-Test-in-Ranchi

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் போடும்போது ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. 

Image

தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டூ பிளஸிஸ் கடந்த 7 டெஸ்ட் போட்டிகளில் டாஸ் ஜெயிக்கவில்லை. அதில் 6 போட்டிகள் தோல்வியிலும், ஒரு போட்டி டிராவிலும் முடிவடைந்தது. இதனையடுத்து இன்றையப் போட்டியில் எப்படியாவது டாஸ் வென்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் தென்னாப்பிரிக்கா அணி நிர்வாகம் ஓர் முடிவை எடுத்தது. அது கிரிக்கெட்டில் அரிதினும் அரிதாக நிகழ்வது.


Advertisement

Image

இன்றையப் போட்டியில் அணியின் கேப்டனாக டூப்ளஸிஸ் டாஸ் போடுவதற்கு களத்துக்கு சென்றார். ஆனால் கூடவே பவுமாவும் சென்றார். கோலி டாஸ் நாணயத்தை மேலே சுழற்ற அது ஹெட்டா, டெயிலா என்பதை டூப்ளஸிஸ் சொல்லவில்லை (ஏன்னா ராசி அப்படி), மாறாக பவுமா சொன்னார். பவுமா டெயில்ஸ் என சொல்ல, ஆனால் விழுந்ததோ ஹெட். இம்முறையும் கோலியே டாஸ் வென்று பேட்டிங் தேர்ந்தெடுத்தார். கேப்டனுக்கு பதிலாக மற்றொருவர் டாஸ் சொல்வதற்கு Proxy Skipper என்று பெயர். தென்னாப்பிரிக்கா மீண்டும் டாஸ் இழந்த பின்பு, கோலி நக்கலாக சிரித்தார்.


Advertisement

 

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close