Published : 24,May 2017 03:56 AM

அறிவுக்கு ஒவ்வாத பகவத்கீதையை பள்ளிகளில் புகுத்துவதா?: கி.வீரமணி கண்டனம்

Baghavat-geeta-in-schools

பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பதைக் கட்டாயப்படுத்தும் தனிநபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் தோற்கடிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களைக் கொண்ட பகவத்கீதையை கல்வித் திட்டத்தில் பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. ரமேஷ் பிதாரி, நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா தாக்கல் செய்துள்ளார். நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பகவத்கீதை வாசிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். இதை அமலாக்காத பள்ளிகளின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று அம்மசோதா கூறுகிறது. இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் உள்ள அத்தனை எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்து தோற்கடித்து, குப்பைக் கூடைக்கு அனுப்ப வேண்டும்.

பகவத்கீதையை தேசிய நூலாக அரசு பிரகடனப்படுத்த வேண்டும் என்று முன்பு குரல் எழுப்பியவுடன் எதிர்ப்பு புயல் போல் கிளம்பியதால் அது பின்வாங்கப்பட்டது. மீண்டும் ஆழம் பார்க்கவே இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எல்லோரும் ஒன்று திரண்டு இம்முயற்சியை முறியடிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்