[X] Close

பிகில் டீசர் எப்போது?: ரசிகரின் கிண்டல் கேள்விக்கு கிண்டலாக பதிலளித்த சிபிராஜ்! 

Actor-speaks-about-bigil-teaser

தமிழ்த் திரையுலகில் விஜய் படங்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. அவரது படம் தொடர்பான அறிவிப்புகளை, அவரின் ரசிகர்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி விஜய் படத்தின் டீஸர் அல்லது டிரைலர் வெளியானால் அதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கின்றனர். 

இந்நிலையில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டீசர் இன்னும் வெளியாகவில்லை.  டீசரை எதிர்பார்த்து காத்திருக்கும் விஜய் ரசிகர்கள் விரைவில் வெளியிடக்கோரி ஹேஸ்டேக் ட்ரெண்டும் செய்தனர். இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திங்கள்கிழமை ஆயுதபூஜை அன்று டீசர் வெளியாகும் என கூறப்படுகிறது. 


Advertisement

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் சிலர் சிபிராஜை டேக் செய்து ''நாளை தளபதி ரசிகன் சிபிராஜ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பிகில் படத்தின் டீசர் வெளியிடப்படும் என படக்குழு அறிவிப்பு'' என நகைச்சுவையாக பதிவிட்டனர். அதற்கு நகைச்சுவையாக பதில் அளித்த சிபிராஜ், ''அதைவிட சிறந்த பிறந்தநாள் பரிசு வேறு எதுவும் இல்லை'' என தெரிவித்துள்ளார்


Advertisement

Advertisement
[X] Close